ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்தது. இந் நிலையில் இது தொடர்பில் மகிந்தவிடம் மன்னிப்புக் கேட்டு மன்மோகன் சிங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.இச் செயற்பாட்டால் நான் வெட்கப்படுகின்றேன் என இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர் கவிதா சிறிவஸ்றவா தெரிவித்துள்ளார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சட்டமின்மையும் அரசின் தப்பிக்கும் போக்கும் மிதிபடும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் “சட்டமின்மையும் சிறுபான்மையினரும்” என்ற தலைப்பில் பேசும் பொழுதுமேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகள் மீறலுக்காக இந்தியாவின் சார்பாக அளிக்கப்பட்ட ஆதரவிற்கு பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த நாட்டின் ஜனநாயகமும் மனித உரிமை குறித்த அக்கறையும் இப்படி இருக்கிறது என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன் என்றார் மனித உரிமைப் செயற்பாட்டாளரான கவிதா சிறிவஸ்றவா.




0 comments:
Post a Comment